Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சாதிய அடிப்படையில் மயானங்கள்? - அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சாதிய அடிப்படையில் மயானங்கள்? - அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

பள்ளிகள் உள்ளிட்ட பொது வசதிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும்போது, மயானங்கள் மட்டும் ஏன் வெவ்வேறாக உள்ளன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் சாதிய அடிப்படையில் மயானங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கீழாரியாகுளம் கிராமத்தை சேர்ந்த செல்லப்பா என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கீழாரியாகுளத்தில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்துக்கு போதிய சாலை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை தனியார் விவசாய நிலம் வழியாகவே மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. 

மயானம் பள்ளமான பகுதியில் உள்ளதால் மழைக் காலங்களில் சுமார் 2 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் கிராம மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. எனவே, இந்த இடங்களில் பொது மயானம் அமைக்க அரசு நிலம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், `பள்ளிகள் உள்ளிட்ட பொது வசதிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும்போது, மயானங்கள் மட்டும் ஏன் வெவ்வேறாக உள்ளன? என்று கேள்வி எழுப்பினர். 

மேலும், தமிழகத்தில் மயானங்கள் பொது மயானங்களாக உள்ளனவா? அல்லது சாதிய அடிப்படையில் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளனவா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

முந்தைய செய்தி
பெரிய நெருக்கடியை சமாளிக்கத் தயாராகுங்கள் - பிரான்ஸ் அரசு அறிவுறுத்தல்
அடுத்த செய்தி
Onion prices surge at weekly market

தொடர்புடைய செய்திகள்